அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட மொடர்னா தடுப்பூசிகள், கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0
15

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டுள்ள “ஸ்புட்னிக் வீ” தடுப்பூசியை, ரஷ்யாவிடமிருந்து,இலங்கைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த, சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, ரஷ்யாவில் தற்போது தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷ்யா, இலங்கைக்கு அறிவித்துள்ளது என்றார்.

கடந்த 2 வாரங்களில் ரஷ்யாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் உயரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால், நேற்று (16) கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசியை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் (15) வரை 157,368 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 14,464 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற மொடர்னா தடுப்பூசிகளை, கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மொடர்னா தடுப்பூசியைப் பொறுப்பேற்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here