அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகினார்?

0
23

சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகியுள்ளார்.

இந்தக் குழுவில் இருந்து கொண்டு விலை அதிகரிப்பு நிர்ணயத்திற்கு பரிந்துரை செய்தால் தனக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுப்பெறக்கூடும் என்ற காரணத்திற்காகவே அமைச்சர் அந்தக் குழுவிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்புக் காரணமாக கட்சிக்குள்ளும், வெளியிலும் பல விமர்சனங்களை பெற்ற அவர் – மீண்டும் தனக்கெதிராக எழும் எதிர்ப்புகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here