அமைச்சர் உதய கம்மன்பிலாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முட்டாள்தனமானது .

0
81

எரிபொருள்களின் விலையேற்றத்துக்கு, அமைச்சர் உதய கம்மன்பிலாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், விலை உயர்வுக்கு ஒப்புதல் கொடுத்த ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது, அமைச்சர் உதய கம்மன்பிலாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், இலங்கை பொதுஜன பெரமுனைக்குள் காணப்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவும் என்றும்
தெரிவித்துள்ளார்.

நான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், யாருக்கு எதிராகவும் இந்நேரத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கமாட்டேன். இது முட்டாள்தனமான
தீர்மானமாகும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறே இருக்கமுடியாது, நாளுக்கு நாள் மாற்றங்கள்
வந்துகொண்​​டே இருக்கும் என்றார்.

“இது, உதயகம்மன் பிலவுக்கும் மாற்று சக்தியினருக்கும் (சாஹர காரியவசம்) ஆகிய இருவருக்கு இடையிலான முரண்பாடுகளை இல்லாமற் செய்யும் நடவடிக்கையாகும்”
என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here