அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

0
22

வலுச் சக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதையடுத்து, தானும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம்திகதி வரை வலுச் சக்தி அமைச்சு மூடப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது அன்டிஜன் பரிசோதனை முடிவின் படி, தான் தொற்றுக்குள்ளாகவில்லை என்றும் 
எனினும், தான் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here