அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

0
54

ஜூன் மாதம் 21 ​ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு நேற்று (06) விசரணைக்கு எடுக்கப்பட்டது இதன்போது குறித்த மெய்பாதுகாவலர், நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை.

அதனையடுத்து சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு ஆஜரான உயிரிழந்தவரின் தாயார்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எனது மகனுக்கு என்ன நடந்தது என்னத்தினால் பிரச்சனை வந்தது என்பதை கண்டறியவேண்டும். எனது பிள்ளைக்கு நீதிக்கவேண்டும் அதுமட்டும்தான் தேவை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here