அமைச்சர் நாமல் ராஜபக்சவை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.

0
97

யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.

வடமராட்சியின் முள்ளி பகுதியில் இடம்பெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்தபோதே நாமல் ராஜபக்ஷவை ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகளும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here