அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

0
9

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இன்றைய (13) அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பேரில், இங்கு விஜயம் செய்த  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகளை விரைவில் தீர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உட்பட சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி முஹம்மட் ஹாறூன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here