அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்- இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

0
22

அரசியலுக்காகவும் எதிர்வரும் தேர்தலுக்காகவும் ஆதாரமில்லாத தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Chanakyan) தெரிவித்திருக்கிறார் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்(SViyalenthiran) தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

எனது தம்பி, மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளதாக கடந்த நாடாளுமன்ற அமர்வில் உண்மைக்கு புறம்பான தகவலை சாணக்கியன் வெளியிட்டிருந்தார். அரசியலுக்காகவும் எதிர்வரும் தேர்தலுக்காகவும் ஆதாரமில்லாத தகவலை தெரிவித்திருக்கிறார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் எந்த வித மண்அனுமதி பத்திரமும் எனது தம்பிக்கு இல்லையென ஆதாரம் ஏம்மிடம் உள்ளது. அவர் சண்முகநாதன் மயூரன் என்பதனை தவறுதலாக சாதாசிவம் மயூரன் என தெரிவித்திருக்கிறார் என்று வியாழேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முதலில் தமிழ் மொழியை கற்க வேண்டும் மண் அனுமதி பத்திரம் சம்பந்தமாக எனது தம்பிக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை வெறும் அரசியலுக்காக இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவலை வெளியீட்டுயிருக்கின்றார்.

எமது மாவட்டத்திற்காக நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனும் எமது கட்சி அமைப்பாளர் சந்திரகுமாரும் மக்களுக்காக பல நன்மையுள்ள அபிவருத்திகளை முன்னெடுத்து வருகிறோம்.

இதனை தடுக்கவே இவர் இவ்வாறன செயற்பாடுகளை முன்னெக்கின்றார். நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள். மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்காமல் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here