அரசாங்கம் முழுமையாக மறுத்துள்ளது.

0
9

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் உள்ள மலசலக்கூடத்தை பயன்படுத்துவதற்கு அனுதிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக மறுத்தது.

சிறைச்சாலையில் உள்ள மலசலக்கூடத்தை பயன்படுத்துவதற்கு ரிஷாட் பதியூதீனுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. என்றும், அந்த மலசலகூடம் மாலை 5 மணியிலிருந்து காலை 06 மணி வரையில் மூடிவிடுவதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி குற்றம் சுமத்தியிருந்தார்.

இதுத் தொடர்பில், சிறைச்சாலையில் ஆணையாளரிடம் தொலைபேசி ஊடாக வினவினேன். ரிஷாட் எம்.பி மலசலகூடத்தை பயன்படுத்த எந்தவிதமான தடைகளும் இல்லையென அவர் தெரிவித்தார் என, அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

உணவு தொடர்பில் கோரிக்கை விடுத்து, வீட்டில் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும். எனினும்? கொரோனா வைரஸ் காரணமாக வெளியிலிருந்து உணவுகளை சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் கூறினார் என்றார்.

எவ்வாறாயினும் வீட்டு உணவுகளை ரிஷாட் விரும்பினால் எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன், போலியான தகவல்களை பாராளுமன்றத்தில் கூறி பாராளுமன்றத்தை தவறாக லக்ஷ்மன் கிரியெல்ல வழிநடத்த கூடாது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அவர் செயற்பட கூடாது எனவும் ஜோன்ஸ்டன் கூறினார்.

நாம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை. உணவு, மலசல கூடம் தொடர்பில் ரிஷாட்டுக்கு பிரச்சினை இருந்தால் அதுத் தொடர்பில் நீதிமன்றில் முறையிடலாம். ஆனால் அவ்வாறு எந்தவிதமான முறைப்பாடுகளும் இதுவரையில் ரிஷாட்டின் சட்டத்தரணி முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here