ஹட்டன் நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் ஐந்து போலியான 500 ரூபா நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வந்த பெண் ஒருவரை அந்த வங்கியின் அதிகாரிகள் மடக்கிப் பிடித்து ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹட்டன் குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண், வங்கிக்கு வந்து வங்கியின் காசாளரிடம் பணத்தை மாற்றுவதற்காக கொடுத்துள்ளார்.
குறித்த பெண் கொடுத்த பணத்தாள்கள் வங்கி அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு போலி நாணயத்தாள்கள் என உறுதி செய்யப்பட்டதையடுத்து உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்ட பெண் விசாரணைக்காக ஹட்டன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் காவல் நிலைய தலைமைப் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.