அவசர விசேட அமைச்சரவை சந்திப்பு எனும் செய்தியை அரசாங்கம் மறுத்துவிட்டது.

0
19

பால்மா, சீமெந்து மற்றும் காஸ் உள்ளிட்ட பொருள்களின் விலைத்தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில், இன்று (07) நடைபெறுவதாக கூறப்படும் அவசர விசேட அமைச்சரவை சந்திப்பு எனும் செய்தியை அரசாங்கம் மறுத்துவிட்டது.

அவ்வாறான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்த அமைச்சரும்
அமைச்சரவை இணைப்பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, அத்தியாவசிய பொருள்கள்
தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுகிறதை ஏற்றுக்கொள்வதாகவும் கூடிய விரைவில்
அதனை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(6) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு
பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றால் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் நாட்டின் தற்போதைய நிலையில், ஆளுங்கட்சி என்ற ரீதியில், அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அந்த பொறுப்பிலிருந்து விலக தற்போதைய அரசாங்கம்விலகியிருக்காது என்றார்.

சிற்சில இடங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும் அந்த
முரண்பாடுகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ள பொருள்கள் தவிர்ந்த ஏனைய பொருள்கள்
இன்றும் (7) நாளையும் (8) விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்த
அமைச்சர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருள்கள் தொடர்பில்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக, மத்திய வங்கி 50 மில்லியன் ஐக்கிய
அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருந்தார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here