அவன்ட் கார்ட் வழக்கில் இருவர் விடுதலை.

0
19

அவன்ட் கார்ட் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, இன்று விடுதலை செய்தார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்துக்கு அனுமதி வழங்கியமை மற்றும் அந்த நிறுவனத்திடம் 35.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்தே இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதென்பதால் குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரும் தீர்மானித்துள்ளனர் என, ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் துஷார ஜயரத்ன நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். 
 
ஆணையாளர்கள் மூவரினதும் உத்தரவின்றியே குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவற்றை மீள பெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே மேற்கண்ட தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here