அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0
40

பெண்ணொருவரை வீட்டுப்பணிப்பெண் என்ற பெயரில் 8 வருடங்கள் அடிமையாக வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அவுஸ்திரேலியாhவைச் சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் நகரில் வசிக்கும் கந்தசாமி கண்ணன் (57) மற்றும் குமுதினி கண்ணன் (53) ஆகிய இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்ளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு எதிரான தண்டனை கடந்த புதன்கிழமை (21) அறிவிக்கப்பட்டது.

இதன்படி குமுதினி கண்ணனுக்கு (Kumuthini Kannan)  8 வருட சிறைத்தண்டனையும் கந்தசாமி கண்ணனுக்கு (Kandasamy Kannan)  6 வருட சிறைத்தண்டனையும் விதித்து விக்டோரியா மாநில உச்சீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தம்பதியினர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தமது வீட்டில் அடிமையாக நடத்தியதாக இத்தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இப்பெண்ணின் நிலை குறித்து 2015 ஜூலை 30 ஆம் திகதி அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. அப்பெண் அதிகாரிகளால் மீட்கப்பட்டபோது மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்ட அப்பெண் சுமார் 40 கிலோகிராம் எடையையே கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்பெண்ணுக்கு அதிக வேலைகள் காரணமாக நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே உறங்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தினமும் 3.39 அவுஸ்திரேலிய டொலர்கள் என்ற அளவிலேயே அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மீதான குற்றச்சாட்டுகளை குமுதினி கண்ணன், கந்தசாமி கண்ணன், தம்பதியினர் மறுத்தனர்.

அப்பெண்ணை தாம் அடிமையாக வைத்திருக்கவில்லை எனவும், அவர் முழுவிருப்பத்துடனேயே தம்முடன் தங்கியிருந்ததாகவும், அவரை அடிமையாக நடத்தியதாக கூறுவது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு எனவும் இத்தம்பதியினர் கூறினர்.
எனினும் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் படி குமுதினி கண்ணனுக்கு 8 வருட சிறைத்தண்டனையும் கந்தசாமி கண்ணனுக்கு 6 வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஜோன் சம்பியன் (John Champion) புதன்கிழமை தீர்ப்பளித்தார். பரோலில் வெளிவருவதற்குமுன் குமுதினி குறைந்தபட்சம் 4 வருடங்களும் கண்ணன் குறைந்தபட்சம் 3 வருடங்களும் சிறைத்தண்டைனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here