வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் நேற்று (05) ஓட்டோவில் வந்த நால்வர், அங்கு மேய்ந்து திரிந்த இரண்டு ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.
அந்நபர்களை,சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் அடையாளம் கண்டு கொண்ட பிரதேச மக்கள், அவர்களை பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடப்பட்டு வருவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.