ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை இன்று (30) பெற்றுக்கொண்டார்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது பழங்குடியினர் அவராவார்.
கண்டியில் உள்ள ஆலயமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில், இன்று காலை ஆதிவாசிகள் மக்கள் குழு, தங்கள் தலைவருடன் சேர்ந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டது.
ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடத்தப்படும் வருடாந்த எசல பெரஹேராவின் தொடக்க விழாக்களில் பங்கேற்கவுள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.