ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஐந்து விருதுகளைப்பெற்று சாதனை.

0
72

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனையானது மாவட்ட வைத்தியசாலைகளுக்கிடையே நடாத்திய போட்டியில் ஐந்து விருதுகளைப்பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை
படைத்துள்ளது.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்புவைத்திய
அதிகாரி திருநாவுக்கரசு கௌரிசங்கரன் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார நிறுவனங்களுக்கிடையே நடத்தப்பட்ட சிறந்த செயற்றிறனுக்கான போட்டியில் மாவட்டத்திலேயே முதல் இடம்பெற்றுச்சாதனை படைத்த
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிறந்த ஆரோக்கிய வாழ்வு நிலையப்போட்டியிலும் முதலிடம் பெற்றுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு திட்டம் 2019/2020 ஆம் ஆண்டுக்
கான போட்டியில் இரண்டாமிடத்தையும் ஆய்வுகூட சேவைகள்
போட்டியிலும் சிறந்த மருந்துக்களஞ்சியசாலை மற்றும் மருந்து வழங்கல் சேவையிலும் சிறப்பு பாராட்டு விருதுகளையும் சுவீகரித்துக்கொண்டது.

அதற்கான விருதுகள் இவ்வாண்டுக்கான செயற்றிறன் விருது வழங்கும் விழாவின் போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு இவ்விருதுகளை வழங்கி வைத்துள்ளதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here