ஆரையம்பதி பிரதேசத்தில் வீதியோர வியாபாரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
32

ஆரையம்பதி பொதுச்சந்தை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு வீதியோர வியாபாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆரையம்பதி பொதுச்சந்தை அதாவது 15 இன்று முதல் இயங்குவதற்கு ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் த .தயானந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார் இதன் காரணமாக வீதி ஓரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாபாரிகள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை இன்றுமுதல் ஆரையம்பதி பொதுச்சந்தையில் மேற்கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .அதேசமயம் 15-07-2021 வியாழக்கிழமை இன்று முதல் வீதி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

நமது ஆரையம்பதி நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here