இடிமின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

0
9

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள எழுச்சி கிராமம் சுங்கான்கேனி மற்றும் குளக்கோட்டன் கிராமம் கிண்ணையடி போன்ற கிராமங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இடிமின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

வீட்டில் வழமைபோன்று இருந்தவேளை திடீரென ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தால் தாங்கள் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் பின்னர் தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று பாதிக்க்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்களது வளவினுள் உள்ள தென்னை மரங்களில் இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் வீட்டினுள்ள இருந்த மின்சாரப் பொருட்கள் மற்றும் வீட்டு மின்னினைப்புக்கள் என்பன சேதமுற்றுள்ளன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கணமழை தொடர்ச்சியாக பெய்து வருவதனால் காற்றுடன் கூடிய மழை வீழ்சி காணப்படுகிறது. இதன்போது இடியுடன் கூடிய மின்னல் தாக்கமும் உள்ளது.மாவட்டத்தின் உள்ள பல்வேறு தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here