இணையதளத்தின் ஊடாக பாலியல் தொல்லை .

0
27

இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ‘ ZOOM ‘ தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பாலியல் தொல்லை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் , பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் வழங்கிய முறைப்பாட்டில் சில பாடசாலை மாணவிகள் இணையதளத்தின் ஊடாக  பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here