இணையதளத்தின் ஊடாக 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்- ரோஹினி கவிரத்ன

0
22

நாடளாவிய ரீதியில் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இணையதளத்தின் ஊடாக 15 வயதுச் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படக் கூடாது. அதுமாத்திரமன்றி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நால்வரும் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (12) திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here