இணையத்தளத்தின் உரிமையாளர் பத்தரமுல்லையில் கைது.

0
29

கல்கிஸையை சேர்ந்த 15 வயது சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் மற்றொரு இணையத்தளத்தின் உரிமையாளர் பத்தரமுல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமியை விற்பனை செய்வது தொடர்பாக இந்த இணையத்தின் உரிமையாளர் விளம்பரங்களை வெளியிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்சம் 4 இணையத்தளங்களில் சம்பந்தப்பட்ட விளம்பரம் வெளியாகியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளங்களுடன் தொடர்பிடைய நால்வரில் இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சிறுமி விவகாரம் தொடர்பில் இதுவரை 30 இற்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here