இணையத்தளம் ஊடாக சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் கைது.

0
34

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here