இணையத்தள உரிமையாளருக்கும், அதன் நிதி முகாமையாளருக்கும் பிணை வழங்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

0
19

கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இணையத்தள உரிமையாளருக்கும், அதன் நிதி முகாமையாளருக்கும் பிணை வழங்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இருவர் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

அதேநேரம் குறித்த சிறுமி இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டார்.

அவரை இந்த மாதம் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here