இந்திய அணிக்கு 276 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
23

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 276 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்தப் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை சார்பில் சரித் அசலங்க 65 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணிசார்பில் புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சகால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here