இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

0
17

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை தொடர்ந்து சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்கு கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகவும், 200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த சவுரவ் கங்குலி, ‘ஆம், என் சுயசரிதையை படமாக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இது இந்தியில் படமாக உள்ளது. ஆனால் இயக்குனரின் பெயரை தற்போது வெளியிட முடியாது. எல்லாம் இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here