இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று இலங்கை மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டுள்ளது.

0
8

சென்னைக்கு வடக்கே கடலில் தத்தளித்த நான்கு இலங்கையர்களை இந்திய மீனவர்கள் மீட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் நட்பை பிரதிபலிக்கும் வகையில் மனிதாபிமான நடவடிக்கையில், இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று இலங்கை மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

IMUL-A-0039-TLE என்ற பதிவு எண்ணைக் கொண்ட லுலு-01 என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் 2 டிசம்பர் 2021 அன்று ஆழமான நீரில் சிக்கி தவித்தது. சென்னைக்கு வடக்கே 24 கடல் மைல் தொலைவில் இந்திய மீன்பிடி படகு ஒன்று இதனை அவதானித்துள்ளது. இலங்கைக் கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட இந்திய மீன்பிடி படகு, இலங்கை படகை அதானி துறைமுகம், காட்டுப்பள்ளிக்கு வெற்றிகரமாக இழுத்துச் சென்றது.

இலங்கை படகில் இருந்த நால்வரும்பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு இந்திய அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here