இந்துக்களுக்கு ஒரு மயானம்.

0
18

பிரிட்டன், பக்கிங்ஹாம்ஷையரில் நவீன வசதிகளுடன் இந்துக்களுக்கான ஒரு மயானம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. காத்திருப்பு அறை, தகன மண்டபம், சடங்குகள் அறை, குளியல் அறை, விழா மண்டபம் உள்ளிட்டவற்றுடன் குறித்த மயானம் அமைக்கப்பட உள்ளது.

இந்து சம்பிரதாயங்களின் படி இறுதி சடங்குகள் செய்வது ஆன்மாவிற்கு விடுதலை அளிப்பதற்கான அடிப்படை விடயம். இதனால் இறந்தவர் குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்கின்றது.

டென்ஹாமில் உள்ள எங்கள் மைதானத்தில் இந்த சேவையை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளோம். மயானம் அமைக்கும் பணிகளில் அனைத்து ஹிந்து அமைப்பினரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என அனுாபம் தொண்டு நிறுவன ஆன்மிக தலைவர் பரம் புயா சாஹேப்ஜி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here