இனி தமிழ் தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது – சஜித் பிரேமதாஸ

0
18

ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், எதிர்ப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து பதாதைகளும் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது.

இந்த விடயம் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் “இனி தமிழ் தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது எனவும், ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்” என சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக கொழும்பு − சுதந்திர சதுக்கத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்ப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து பதாதைகளும் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததை அவதானித்த சிலர், எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளாது வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here