இன்று ஹெல்ப் எவர் தன்னார்வ நிறுவனத்தினரால் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடியை சூழ உள்ள கடற்கரை பிரதேசங்களில் சிரமதானபணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

0
137

இன்று ஹெல்ப் எவர் தன்னார்வ நிறுவனத்தினரால் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடியை சூழ உள்ள கடற்கரை பிரதேசங்களில் சிரமதானபணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்று சூழல் மாசடைவது சமூகத்துக்கு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை பொறுப்புணர்வுடன் பொது இடங்களில் அவற்றை சேகரிக்கும் தொட்டிகளில் போட்டுவந்தாலே போதும் சூழல் மாசடைவதை கணிசமான அளவு தவிர்த்து கொள்ளலாம் .
இது சம்பந்தமாக மட்டக்களப்பில் உள்ள தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் தாமாக முன் வந்து பொது மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

நமக்கு இனியவைகளை மட்டுமே வழங்கி கொண்டு சுற்று சூழலை மாசடைய வைக்கும்
பிளாஸ்டிக் கழிவுகளை ஹெல்ப் எவர் அமைப்பினரால் அகற்றப்பட்டமை தொடர்பில் கல்லடி வாழ் சமூக ஆர்வலர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here