இயக்குனர் சங்கர் வீட்டு திருமணம்.

0
23

தமிழில் ‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாகப் பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்தியத் திரையுலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.

 இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின்  திருமணம் இம் மாதம் 27ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அண்மையில்  தகவல்கள் வெளிவந்தன.

அந்தவகையில்  தற்போது ஷங்கரின் மகளைத்  திருமணம் செய்யவுள்ளவர்  மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் என்று கூறப்படுகின்றது.

மேலும் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், அவர்  புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here