இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சில இணைய தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை- நிதி அமைச்சர்

0
28

சேதனப் பசளைப் புரட்சி வாபஸ் பெற்றுக்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரசாயன பசளைப் பயன்பாட்டை ரத்து செய்து சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம் எவருக்காகவும் மாற்றப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேதனப் பசளை தொடர்பான அரசின் முடிவில் மாற்றம் இல்லை, இவ் வகையான புதிய புரட்சிக்கு முட்டுக்கட்டைகளை போட சில தரப்பினர் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சில இணைய தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதன் மூலம் லாபமீட்டிய தரப்புக்கள் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here