இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படும்.

0
25

ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசியை வழங்குவதற்கு உலகில் பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் நாட்டில் அரசாங்கம் இதுதொடர்பில் எந்தவித கொள்கையுமின்றி செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை குறிப்பிடார்.

உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தற்போது இணைய வழி கல்வியில் உள்ளடக்கப்படாத இயற்பியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் செயல் முறைகள் காணொலி மூலம் காட்சிப்படுத்தி இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தக்சலா தொலைக்காட்சி ஊடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here