இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டவர்களுக்கு துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து ஆராயப்படும்.

0
45

கொவிட் -19 வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான தேவை ஏற்படின் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டவர்களுக்கு துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து ஆராயப்படுவதாகவும் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களும் மிக கவனமாக தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுவிட்டோம் என்பதற்காக கொவிட் -19 வைரஸ் தொற்றாது என அர்த்தப்படாது. இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் தொற்றும் வீதமும் குறைவடையும் என்பதே இதன் பிரதாக காரணியாகும். ஆகவே தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டால் வைரஸ் தொற்றாது என்ற நிலைப்பாட்டிற்கு எவரும் வரக்கூடாது. விரைவாக சகலரும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதுடன், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here