கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் மதுபான விற்பனை அவசியமில்லை என்றும், ஒன்லைன் மது விற்பனைக்கு தாம் எதிரானவர் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இதை தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டாலும், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கின்றது.
இந்த நிலை மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, கிராமங்களில் சட்டவிரோத மதுபான வர்த்தகம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கான தீர்வாக ஒன்லைனில் மது விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானத்தை தாம் தனிப்பட்ட முறையில் எதிர்த்ததாகவும் தெரிவித்தார்.