இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ் தானிகர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

0
102

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாட் ஹட்டக், நேற்று (02) கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தையொட்டி, பொத்துவில் பிரதேச மக்களுக்கு உலருணவுகள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டுக் கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபினின் தலைமையில், பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் அடையாளமாக பொத்துவில் தனியார் விடுதியில் நடைபெறுகின்றன.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்தப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அனுராத, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம். ஜஹ்பர் உட்பட பல முக்கிய பிரமுகர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here