இலங்கைக்கு அனுப்பப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை.

0
7

சீனாவின் சிவின் பயோடெக் நிறுவனத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் தாவரத் தனிமைப்படுத்தல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அர்வினியா என்ற நுண்ணுயிரி இருப்பது தெரியவந்ததையடுத்து,குறித்த உரம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், அந்த மறுப்பை ஏற்காத சீன நிறுவனம், சிங்கப்பூர் எஸ்ஜிஎஸ் நிறுவனத்திடம் பரிசோதனைக்காக மூன்றாம் தரப்பிடம் ஒப்படைத்தது. மூன்றாம் தரப்பு மூலம் விசாரணை நடத்த இலங்கை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதேவேளை, உரம் கையிருப்பு உள்ள கப்பலை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளதுடன், அதற்கான இழப்பீட்டை வழங்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here