இலங்கைப் பிரஜையைக் காப்பாற்ற முயன்ற நபருக்கு துணிச்சலுக்கான இரண்டாவது உயரிய சிவில் விருதான தம்கா ஐ ஷுஜாத் வழங்கப்பட உள்ளது.

0
41

அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் போது இலங்கைப் பிரஜையைக் காப்பாற்ற முயன்ற நபருக்கு பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் துணிச்சலுக்கான இரண்டாவது உயரிய சிவில் விருதான தம்கா ஐ ஷுஜாத் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று அறிவித்தார்.

“சியால்கோட் கொலைச் சம்பவத்தின் போது தியவதனகே டான் நந்தஸ்ரீ பிரியந்தவை கொலைக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாலிக் அட்னான் முயற்சிப்பதைக் காட்டும் காட்சிககள் வெளியாகியிருந்தன.

பிரியந்தவுக்கு அடைக்கலம் அளித்து காப்பாற்ற முயன்ற மலிக் அட்னானின் தார்மீக தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் தேசத்தின் சார்பாக நான் வணக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். 

சியால்கோட்டில் பாதிக்கப்பட்டவரைக் காக்க உடல்ரீதியாக முயற்சித்த அவருக்கு தம்கா ஐ ஷுஜாத் விருது வழங்குவோம்” என்று பிரதமர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here