இலங்கையின் முதலாவது தேசிய சந்தனமர பூங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

0
26

கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தேசிய சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (20) செவ்வாய்க்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

9 ஏக்கர் நிலத்தில் 1000 சந்தனமரங்களைக் கொண்டு குறித்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவிற்கு நடுவில் 200,000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய 11 நீர் தடாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 900 மல்லிகை தாவரங்கள் உள்ளன. இந்த சந்தன மரப்பூங்காவில் அழகான முறையில் வர்ண மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நுழைவாயில் இருபுறமும் வண்ணமயமான பூங்கொத்துகளுடன் சுற்றுச்சூழலில் மின்விளக்குகள் உள்ளன. இதனை பொது மக்கள் நாளை முதல் பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here