இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது- இலங்கை மத்திய வங்கி

0
88

இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான இறக்குமதிகளுக்கு செலுத்துவதற்கு மாத்திரம் போதுமான அந்நிய செலாவணியே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.

சீனாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாற்ற வசதிகளுக்காக கிடைத்ததுடன் இந்த தொகையானது நாட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானது.

இதனை தவிர இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிடம் இருந்து அந்நிய செலாவணி பரிமாற்ற வசதிகள் கிடைத்துளளதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here