இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2136 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

0
45

இலங்கையில் மேலும் 63 பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2136 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மரணங்கள் மே மாதம் 23ம் திகதி முதல் ஜூன் 11ம் திகதி வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மே 23ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் 12 பேரும், ஜூன் 1ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் 51 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் 30 பெண்களும், 33 ஆண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் வீட்டில் வைத்து 7 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 9 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here