இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய நோய் .

0
28

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் ஒரு வீதமானோருக்கு கவசாகி என்ற நோயை ஒத்த அறிகுறிகளுடன் புதிய நோய் நிலைமை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியருமான வாசன் ரட்னசிங்கம் தெரிவித்தார்.

தற்போது சிறுவர்களைத் தாக்கும் இந்நோய் நிலைமை தொடர்பில் வினவியபோது அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கொவிட் -19 தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது குறைவாகக் காணப்பட்டாலும் ஏனைய நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அளவு அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் ஆழமாக அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் தற்போது கொவிட் -19 தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு தொற்றின் பின்னர் சில உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட இந்த தொற்று தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here