இலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுகிறது.

0
82

நாட்டில் மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்புகள் தற்போது உள்ளதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல  உலகிலுள்ள அழுத்தத்துடன் அதனைப் பராமரிப்பது சவால் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தற்போது இலங்கையில் அத்தியாவசிய உணவுகள் கையிருப்பில் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கையிருப்புகளின் நிலை குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது.

இது குறித்து தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதுடன் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க பல வேலைத்திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் பல வருமான வாயில்கள் தற்போது செயலிழந்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கைக்குள் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும்  தற்போது 4.5 பில்லியன் கையிருப்புகள் காணப்பட்டாலும் சிவப்பு அபாய நிலை இன்னும் ஏற்படவில்லை என தெரிவித்த அமைச்சர்  ஏற்படக் கூடிய ஆபத்தை நிராகரிக்க முடியாதென்றும் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருக்க அரசாங்கத்தால் சவால்களுக்கு முகங்கொடுத்து அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here