இலங்கையில் பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0
67

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவற்றுள் 8 மரணங்கள் நேற்றைய தினத்தில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றில் 11 மரணங்கள் பதிவாகின்றமை சாதாரணமான ஒரு நிலமை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாதசாரிகள் இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 பேர், சைக்கிளில் பயணித்த 2 பேர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here