இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

0
49

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று, இன்று (02) காலை முன்னெடுக்கப்பட்டது.

இப்பேரணி, மட்டக்களப்பு- காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் காந்திபூங்காவை வந்தடைந்தது.

பல்வேறு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் இணைந்துகொண்டிருந்தனர.

“அதிபர், ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு”, “அதிபர், ஆசிரியர்களின் சேவையை “அகப்படுத்தப்பட்ட சேவை”யாக அங்கிகரி” “அதிபர், அசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து”, “கொத்தலாவல சட்டமூலத்தை அமுல்படுத்தாதே”, “அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து”, “இலவசக் கல்வியை இராணுவ மயமாக்காதே” போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். 

வா.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here