இலங்கை இஸ்ரேலுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

0
40

இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் இலங்கை வான் படையின் கெஃபிர்(Kfir)வானூர்திகளை மேம்படுத்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

கெபிர் வானூர்திகளின் அடிப்படை மின்னணுவியல் கருவிகளை, மேம்பட்ட 4 பிளஸ் தலைமுறை போர் வானூர்தி மின்னணுவியல் கருவி மூலம் மாற்றுவது, ரேடார் மேம்படுத்தல், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதிய ஹெல்மெட் என்பன இந்த ஒப்பந்தத்தில் அடங்குகின்றன.

மேம்படுத்தல் செயல்பாட்டில் இலங்கை வான்ப்படை பணியாளர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை மாற்றுவதும் அடங்கும்.

கெபிர், முதன்முதலில் உருவாக்கப்பட்டபோது போர்க்களத்தில் ஒரு கள நிலவர மாற்றியாக பயன்பட்டது.

அந்த வானூர்திகள், கனமான வெடி மருந்துகளை எடுத்துச் செல்லவும், எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அடையவும் பயன்படுத்தப்பட்டன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here