இலங்கை தொழிற் சங்கங்களின் சம்மேளத்தால் ஒரு நாள் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று (08) இடம்பெறவுள்ளது.

0
11

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும் பல்வேறு
கோரிக்கைகளையும் முன்வைத்தும், அகில இலங்கை தொழிற் சங்கங்களின்
சம்மேளத்தால் ஒரு நாள் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தப்
போராட்டம், இன்று (08) இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு முன்னாலும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாலும்
அனைத்துத் திணைக்களங்களின் தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில்
ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, வட மாகாண
அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் சங்கமும் ஆதரவை வழங்கியுள்ளதாக, அந்தச்
சங்கத்தின் தலைவர் க.விக்னேஸ்வரானந்தன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும்
ஆதரவை வழங்கியுள்ளதாக, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்
சங்கத்தின் தலைவர் கே.எம். கபீர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here