இலங்கை பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகிறது.

0
13

கொரோனா தொற்று ஒழிப்புக்கான பூஸ்டர் (Booster ) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலிலுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்தார். அதற்கமைய, இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார். 

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசி ஒவ்வொன்றும், ஏழை நாடுகளுக்கு கிடைக்க வேண்டியவை, இதுவரையிலும் தடுப்பூசிகள் கிடைக்காமல் பல நாடுகள் உள்ளன.

ஆகவே உலக சுகாதார அமைப்பு பூஸ்டர் தடுப்பூசி சிறந்த பலனை கொடுத்தாலும், அதை செலுத்துவதற்கு அனுமதியளிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையிலேயே கொரோனா தொற்று ஒழிப்புக்கான பூஸ்டர் (Booster ) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here