உள்நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாகஅதிகரித்த போதிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தையே சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்வதும் ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அறவிடப்படும் தொகை 300 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும், இலங்கை மின்சார சபையில் இருந்து அறவிடப்படும் தொகை 60 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
நிதி நிலைமை, அதிக கடன், கப்பல் நிறுவனங்களுக்கான தாமதக் கட்டணம் மற்றும் வங்கி வட்டி போன்ற காரணங்களும் காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற பணியாளர்கள், திறமையற்ற மற்றும் தேவையில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 25% ஊதிய உயர்வு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காமை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை நம்பியிருப்பது மற்றும் அதிக விநியோக செலவுகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.