இலங்கை மக்களுக்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக எந்தவொரு நபரும் பணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை

0
23

நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப்போன்றே அமெரிக்காவினால் இலங்கைக்கு அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது இலங்கை மக்களுக்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக எந்தவொரு நபரும் பணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின்கீழ் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் பிரத்யேக விமானமொன்றின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here