இளைஞனின் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

0
52

மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 3ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மர்மமானமுறையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த இளைஞனின் சடலத்தை தோண்டியெடுத்து, இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (18)  நடைபெற்றபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.

சந்திரன் விதுசன் என்னும் இளைஞன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன், கைதுசெய்யப்பட்ட மறுதினமே சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும் என்று கோரி, பெற்றோரால் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டட நிலையிலேயே, இளைஞனின் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here